Friday, July 11, 2014
போங்கு பாகவதர் உருவான கதை
சங்கீத சாம்ராட் வேணு ஸாஸ்த்ரிக்கு மகன் பிறந்திருப்பதாக அறிந்து நானும் என் நண்பரும் மருத்துவமனைக்குச் சென்றோம்.
அங்கு வேணு ஸாஸ்த்ரி எங்களை அழைத்து, “ ஓய்!! என்னோட ஆலாபனையை விடும். குழந்தை அழறது கூட ஆலாபனை பன்றாப்ல இருக்கு!! கேட்டுப் பாருங்கோ” என்று அவர்களை குழந்தையின் அழுகையை ரசிக்கக் கோறினார்.
“இது என்ன ஆரபியா? அடானாவா? எப்படி ஓய் கேக்கறது?” என்று நண்பர் இழுக்க, அவரை மடக்கி, “ஸாஸ்த்ரியிடம் அப்படி பேசாதீங்கோ!! அவர் பேரை சொல்லித்தான் நாம பலபேர்கிட்ட மரியாதை வாங்கிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நிமிஷம் கேட்டுட்டு போயிடலாம்!” என்றேன்.
அந்தக் குழந்தையும் சொல்லி வைத்ததுபோல் அழ, ஸாஸ்த்ரி “ கேட்டேளா?” என்று பெருமிதத்துடன் கேட்டார்.
பொறியில் மாட்டிய எலியின் சத்தம் நினைவுக்கு வர, “குழந்தை நல்ல பாடகனாய் வருவான்” என்று கூறி வெளியே வந்துவிட்டோம்.
அப்போது உள்ளே வந்த வேறு இருவரிடம், “ ஓய்!! என்னோட ஆலாபனையை விடும். பையன் அழறது கூட அலாபனை பன்றாப்ல இருக்கு!!” என்று அவர்களையும் குழந்தையின் அழுகையை ரசிக்கக் கூட்டிச் சென்றுவிட்டார்.
“வருங்கால சங்கீத சாம்ராட் வாழ்க” என்ற வாழ்த்து வானை இடித்தது.
சில போங்கு பாகவதர்கள் எப்படி உருவாகிறார்கள் .என்ற உண்மை அப்பொழுதுதான் விளங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment